Skip to main content

“இபிஎஸ்ஸின் திறமையை பார்த்து கூட தமிழன் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா சொல்லி இருக்கலாம்” - செல்லூர் ராஜு

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

sellur raju talks about amit sha speech for eps prime minister

 

எடப்பாடி பழனிசாமியின் திறமையைப் பார்த்து கூட தமிழன் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா சொல்லி இருக்கலாம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்கு உள்ளதோ அந்த கட்சி தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். இதுதான் நிதர்சனமான உண்மை ஆகும். அதேபோல் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும். அண்ணாமலை சொல்கிறார் பாஜக தலைமை தான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்று. எடப்பாடி பழனிசாமி கூடத்தான் அதிமுக 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சொன்னார். அதிமுக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். இதனை ஏற்றுக்கொண்டு வரும் கட்சிகளை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு ஒத்து வராத கட்சிகள் பற்றி கவலை இல்லை. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. வில்லாதி வில்லனப்பா, வல்லவனுக்கு வல்லவன் எடப்பாடி பழனிசாமி.

 

ஒரு தமிழன் பிரதமராக வர முடியும் என்று அமித்ஷா சொல்கிறார். இதனை எடப்பாடி பழனிசாமியின் திறமையை பார்த்து கூட சொல்லி இருக்கலாம். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி ஏன் வரக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா மோடியா லேடியா என்று சொன்னபோது ஜெயலலிதாவிற்குத்தான் வாக்களித்தார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற செல்வாக்கிற்கு மக்கள் அவருக்கே வாக்களிக்கலாம்.

 

ஒரு கட்சியை வளர்க்க அகில இந்திய தலைவர்கள், மாநில தலைவர்கள் பல கருத்துகளை சொல்வார்கள். அதனை எல்லாம் அளவுகோலாக இப்போதே எடுத்துக்கொள்ளக் கூடாது. கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இன்னைக்கு இருக்கிற கூட்டணி நாளைக்கு இருக்குமான்னு சொல்ல முடியாது. ஆளுநர் சொல்லுகிற கருத்துகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள அவரின் கட்சியாகவும், பிரதிநிதியாகவும் அதிமுக இல்லை. எங்களுக்கு என்று கொள்கையும், கோட்பாடும் உள்ளது. ஆளுநரை விமர்சிக்கவும் நாங்கள் தயாராக இல்லை. ஆளுநரை வாழ்த்தவும் இல்லை. விமர்சிக்கவும் மாட்டோம்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.