Skip to main content

“ஒட்டுண்ணியை விட கேவலமானவர் ரகுபதி” - செல்லூர் ராஜு காட்டம்

Published on 15/05/2025 | Edited on 15/05/2025

 

Sellur Raju criticizes Raghupathi regarding the Pollachi issue

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதியும் எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். 

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு பதலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், கடந்த நான்கு ஆண்டுகள் இம்சை அரசன் புலிகேசி தர்பார் நடத்தி வரும் ஸ்டாலினின் ஆஸ்தான கூவல் கொத்தடிமை ரகுபதி, இத்தனை ஆண்டுகள் முட்டுக் கொடுத்து கொடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போதுதான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கும் விதமாக, அமைச்சர் இலாகா கொடுத்துள்ளார் பொம்மை முதலமைச்சர். அந்த உற்சாகத்தில் பலத்த முட்டுகளுடன் நேற்று (14.5.2025) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

யார் இந்த ரகுபதி? ஜெயலலிதா கைகாட்டவில்லை என்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இவர் எங்கு இருந்திருப்பார்? இவருக்கு அரசியல் வாழ்வளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியைவிடக் கேவலமானவர் தானே இந்த ரகுபதி? தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது போதைப் பொருள் புழுக்கம் அமோகமாக உள்ளது. மொத்தத்தில் கும்பி எரியுது, குடல் கருகுது. குளு குளு ஊட்டி போட்டோ ஷூட் கேட்கிறதா? என்று  ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்லுங்கள் மிஸ்டர் ரகுபதி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை  சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

திமுக ஆட்சியில் நடைபெற்ற, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கும் திமுக-வுக்கும் சம்மந்தமே இல்லை என்று பச்சைப் பொய் பேசியவர் தானே இந்த ஏகுபதி ? இந்த ரகுபதியின் பொய்யால் சட்டப் பேரவையில் ஸ்டாலினே, ஞானசேகரன் திமுக பொறுப்பாளர் அல்ல, அனுதாபி என உருட்ட வேண்டிய நிலைக்குத் தானே தள்ளப்பட்டார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர் லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை காரித் துப்பியதே, இதெல்லாம் மறந்துபோச்சா ரகுபதி? உங்கள் முதலமைச்சர் ஸ்டாலிளைப் போன்றே, உங்களுக்கும் ஞாபக மறதியா?

கோடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து, குற்றப்பத்திரிக்கை போட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி ஜாமீன்தாரராக இருந்தது திமுக-வினர். கோடநாடு வழக்கை விரைவில் முடியுங்கள் என்று தானே, எங்கள்  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சொல்லி இருக்கிறார்? நான்கு ஆண்டுகளாக கோடநாடு வழக்கை விசாரித்து முடிக்க வக்கில்லாத  ஸ்டாலினின் கொத்தடிமை ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை? 

முக்கி முக்கி வராத நிதி,  எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷாவை சந்தித்துப் பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்? திமுக நடத்திய போராட்டக் காமெடி நாடகத்தை நம்பி, மத்திய அரசு நிதி கொடுத்தது என ஒட்டுண்ணி ரகுபதி சொல்வாரானால், அது செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு.

இப்படித் தான், 7.5% இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் மாளிகை முன்பு  ஸ்டாலின் அவியல் கிண்டியதால் தான் வந்தது என்று ஒரு உருட்டு உருட்டினர் திமுகவினர். அந்த உருட்டை ஸ்டாலினின் பேரன் கூட நம்பமாட்டான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் அரசியல் அடையாளம் பெற்று, அஇஅதிமுக-வில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்ததும், கொள்ளையர்களின் கூடாரமான திமுக-வுக்குச் சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம். மக்களோடு மக்களாக நின்று மக்களுக்கான அரசியலைச் செய்யும், எங்கள்   பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

நாங்கள் யாரும் ஒருபோதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை அஞ்சப்போவதும் இல்லை. 1991-ல் சட்டமன்ற உறுப்பினரானபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொந்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? பினாமி பெயர்களில் எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? இப்படி எண்ணிலடங்கா சொத்துக்களை வாரிக் குவித்த ரகுபதி தான், நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.

அறிவாலயத்தில், மேலே ரெட்டுக்கு பயந்து கீழே கட்சியை காங்கிரசுக்கு அடபானம் வைத்த கலைஞர் குடும்பத்தின் கொத்தடிமைகள், மாநில உரிமைபற்றி பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள். எவ்வளவு மேக்கப் போட்டாலும்,  எத்தனை போட்டோ ஷூட் நடத்தினாலும் ஸ்டாலினால் இளி மக்களை ஏமாற்ற முடியாது. 2025-க்குப் பிறகு சட்டையைக் கிழித்துக் கொண்டு ஸ்டாலினும், திமுக-வும் Back to fom (அதான், பூனை மேல் பதில் வருவது உறுதி என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்