தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் ராஜூ சர்ச்சையை ஏற்படுத்தும் அளவில் பேசியுள்ளார். அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதாவது,

sellur raju

Advertisment

‘‘நம்மிடம் இருந்து பிரிந்து உதிர்ந்த இலையான, கட்சியை சேர்ந்தவர்கள் தொகுதியில் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து தெருவில் உலா வருகின்றனர். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பணம் கொடுக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வித்தியாசமாக டிடிவி அணியினர் பணத்தை விநியோகம் செய்கின்றனர். நமக்கு பயந்து தற்போது அவர்களும் பணம் விநியோகிக்கின்றனர். அவர்கள் சர்வசாதாரணமாக தொகுதிக்குள் வலம் வரும் அளவுக்கு அதிமுக ஆட்சி உள்ளது.’’

Advertisment

ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இப்படி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.