Advertisment

இவரு மாதிரி தான் தலைவர் இருக்கணும் பொங்கிய சீமான்... சீமான் யாரை சொல்கிறார் தெரியுமா? 

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் நலப் பேரியக்கம் சார்பாக மு.களஞ்சியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

ntk

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, மம்தா பானர்ஜி போல் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைவர் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரித்ததற்குக் காரணம் மதம் தான்' என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மாணவர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

Advertisment

congress ntk protest seeman Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe