Advertisment

”உலகில் எங்குமே நடக்காத ஒன்றையா கே.டி ராகவன் செய்துவிட்டார்” - சீமான் கருத்து!

fg

பாஜகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த வீடியோ, பாஜகவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கே.டி ராகவன், " உயர்தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட எனக்கு எதிரான சதி, தர்மம் வெல்லும்" என்று தெரிவித்திருந்தார். மேலும், தான் இந்த விவகாரம் தொடர்பாக பதவியை ராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் சீமான கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம்கே.டி ராகவன் தொடர்பான கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், " ராகவனின் அனுமதியில்லாமல் அவரது தனிப்பட்ட விஷயங்களை வீடியோ எடுப்பது சமூக அவலம். முதலில் வீடியோ வெளியிட்டவரை கைது செய்திருக்க வேண்டும். உலகில் எங்குமே நடக்காத ஒன்றையா ராகவன் செய்துவிட்டார். ராகவன் அறையில் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது, நம்முடைய சமூகம் கேடுகெட்ட சமூகம் ஆகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. யார் யாரோடு பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்பது, வெளியிடுவது எல்லாமே தவறு" என்றார்.

Advertisment

kt raghavan seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe