நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் பிடித்தனர்.இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் 3 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றது.குறிப்பாக சென்னையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் மூன்றாம் இடம் பிடித்தது.

seeman

Advertisment

Advertisment

இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது.இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,தமிழ்நாட்டில் மக்களை கவர போராட்டங்கள் பண்ண தேவையில்லை,பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் போதும் மக்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்றும்,நடந்து முடிந்த தேர்தல் அதை தான் காட்டுகிறது என்றும் மக்கள் இன்னும் சினிமா மோகத்தில் தான் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.இது பற்றி விசாரித்த போது,நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்களை கமலின் மக்கள் நீதி மய்யம் கவர்ந்ததே காரணம் என்றும் இதனால் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.