Advertisment

“நாம என்ன செய்யுறது சொல்லுங்க” - சீமான் கவலை

Seeman regretted the trend of Tamil cinema fans

Advertisment

“ரசிகர்களின் செயல்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும் அவர்கள்அப்படிசெய்யாத பொழுது நாம் என்ன செய்வது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தேவக்கோட்டையில்கல்லூரி விழா ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொழுதுபோக்குகளிலும் கேளிக்கைகளிலும் அதிக நாட்டம் கொண்ட மக்களைப் போராடவும் புரட்சி செய்யவும் தயார் செய்ய முடியாது. மற்ற மாநிலங்களைப்பார்த்தாவதுநம் கற்றுக்கொள்ள வேண்டும். கேரளாவிலும் ஆந்திராவிலும் படம் வெளியாகிறது. தமிழகம் போல் எங்கேயும் கொண்டாட மாட்டார்கள்.

பதாகைகளுக்குபாலூற்றுவது. கோவில்களில் பறவை காவடி எடுப்பது போல் முதுகில் குத்திக்கொண்டு அதில் தொங்கிக்கொண்டு ஒருவர் பதாகைக்கு மாலை போடுகிறார்.அதைப்பார்க்கும் பொழுது நமக்குபகீர்என்று இருக்கிறது.லாரியிலிருந்துநடனமாடும் பொழுது கீழே விழுந்து ஒருவர் இறந்துவிட்டார். படம் பார்க்க வேண்டும். கைதட்ட வேண்டும். காசு கொடுக்க வேண்டும். அதோடுவந்து விட வேண்டும். இதை நடிகர்கள் தான் கண்டிக்க வேண்டும். அவர்கள் கண்டிக்கமாட்டேன் என்கிறார்களே. நாம் என்ன செய்வது சொல்லுங்கள். நமது பிள்ளைகளும் திரைக் கவர்ச்சி மயக்கத்தில் இருக்கிறார்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டும்” என்றார்.

ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe