Advertisment

சீமான் கட்சியை முடக்க வேண்டும்: காங். மாவட்டத் தலைவர் போலீசில் புகார்

kallakurichi congress

Advertisment

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, நாம் தமிழர் கட்சியை முடக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சின்னசேலத்தார் ஜெய்கணேஷ் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த (13.10.2019) அன்று விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சிதலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் பேசும்போது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தேச ஒற்றுமைக்கும், தேச பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும் செயலாகும்.

எனவே சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து நாம் தமிழர் கட்சியை முடக்கி தக்க நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் தெற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

kallakurichi Naam Tamilar Katchi rajiv ganthi seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe