Advertisment

சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணி?; சீமான் பதில்

Seeman interview at trichy to spoke about vijay

Advertisment

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தான் மாற்றுக் கட்சிகளுக்கு செல்கிறார்கள். தமிழ் கடவுள் முருகனை இப்போதுதான் ஆளுங்கட்சியினருக்கு தெரிகிறது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குடமுழுக்கு பாராயணம் என்ற வடமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அன்னதானமும், 2 லட்சம் பேருக்கு பஞ்சாமிர்தமும் கொடுத்தேன் என்று சொல்வதால் மட்டும் முருகனின் பெருமையை சொல்லிவிட முடியுமா?. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் இயற்றிய தி.மு.க அரசால் அதை செயல்படுத்த முடிந்ததா?

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க எங்கே தமிழை வளர்த்திருக்கிறது. அவர்கள் வந்த பிறகு என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்கள்” என்றார். அதனை தொடர்ந்து அவரிடம் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் தொடர்பான கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் அப்பன் ஆத்தா மனைவி குழந்தைகளுக்கும் மானம் இருக்கிறது, நாங்கள் ஒன்றும் ஈனப்பிறவி கிடையாது. அவரவர் வேலையை பார்த்தால் சரியாக இருக்கும்.

சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதுவரை 50,60 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டோம். 117 தொகுதிகளில் ஆண்களையும்,117 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்க உள்ளோம். தம்பி விஜய்யுடன் கூட்டணி சேர்வது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கு. 2025க்கு பிறகு பேச முடியும். விஜய் எங்களுடன் கூட்டணி வைப்பது காலம் தான் பதில் சொல்லும். எங்களுக்கு என்று தனி கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையை யார் மதிக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்

seeman trichy
இதையும் படியுங்கள்
Subscribe