விளைநிலத்தை பிடுங்கி நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுகின்றனர் என்றும், நோக்கமற்ற தலைமைகளிடம் அதிகாரம் இருப்பதே இதற்கு காரணம் என்றும் சீமான் கூறியுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவில் நக்சலைட்டுக்கு ஆதரவாக பேசி இருப்பவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவராக இருக்க மாட்டார்.

Advertisment

தமிழகத்தில் பயங்கரவாதி, நக்சல் ஊடுருவி இருப்பதாக தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசி வருகின்றார். ஆனால் அமைச்சர் வேலுமணி உட்பட தமிழக அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர். இதில் யார் சொல்வதை நம்புவது? தேவையற்று திட்டமிட்டு இது போன்ற கருத்தை அவர்கள் பரப்பி விடுகின்றனர்.

உலகமய பொருளாதார கொள்கையை ஏற்றதில் இருந்து சேவை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது.கோவையில் தண்ணீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டிற்கு கொடுத்து இருப்பதில் வியப்பு எதுவுமில்லை. அனைத்தும் வியாபாரமாக்கப்பட்டு விடும். இது பேரபாத்தை ஏற்படுத்தும்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

தமிழர்களின் உரிமையை காக்க மத்திய அரசு எப்போதும் துணைநின்றதில்லை. மாறாகதமிழகத்தை இராணுவ நிலமாக மாறிப்போய்விட்டது. இதை குறிவைத்து காய் நகர்த்தப்படுகின்றது.மண்ணை, நாட்டை நேசிக்க கூடியவர்கள் ஆட்சியில் இல்லை.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

ஓசூர், நெய்வேலி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக விமான நிலையம் அமைக்க கட்டாயம் நிலம் ஆக்கிரமிக்கப்படும். மேலும் பல்வேறு திட்டங்களால் விளைநிலத்தை பிடுங்கி நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுகின்றனர். நோக்கமற்ற தலைமைகளிடம் அதிகாரம் இருப்பதே இதற்கு காரணம் என்றார்.