Advertisment

"செத்து போயிருங்க, இல்லனா நான் கொன்றுவேன்"... சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு... கைதாகிறாரா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்தனர். அதே போல் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பிரபாகரன் தனக்குபொட்டுஅண்ணன் வீட்டில் விருந்து கொடுத்ததைப் பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் பிரபாகரன், காட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் அழைத்துச்சென்று விதவிதமான உணவுகளை விருந்தளித்து தனக்கு ருசிக்க தந்ததாகவும் சீமான் கூறிவந்தார்.

Advertisment

seeman

இந்நிலையில் தற்போது மாவீரர் நாளுக்காக மதுரை ஒத்தக்கடையில் பேசிய சீமான் 'என் தம்பிகளை பிடித்து சிறையிலடைப்பவர்களுக்கும், நாம் தமிழர் கட்சி மீது வழக்கு போடுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் எல்லாரையும் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வருவதற்குள் நீங்கள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் உங்களை கொன்ற பழிக்கு நான் ஆளாக வேண்டியிருக்கும்' என பேசியுள்ளார். சீமான் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போது, சீமான் ஆட்சிக்கு வருவேன் என்று கூறுவது, கடல் வற்றி, கொக்கு கருவாடுதின்பதுபோல நடவாத காரியம்' என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் சீமான் அடிக்கடி பொது அமைதிக்கு எதிராக பேசி வருவதால் அவர் மீது வழக்கு போட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

admk minister ntk seeman Speech
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe