ADVERTISEMENT

ரஜினிகாந்தின் அரசியல் முடிவு வரவேற்கத்தக்கது...- சீமான் 'வாழ்த்து'

01:09 PM Mar 12, 2020 | kalaimohan

ரஜினிகாந்தின் அரசியல் முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்நிலையில் ரஜினியின் தற்போதையை அரசியல் முடிவை வரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில்,

ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! எனக்கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த சமூக ஊடகம் சார்ந்த பாசறை கூட்டத்தில் பேசிய சீமான், தன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு வாழ்த்து அனுப்பியவர் ரஜினிகாந்த், அந்த கடிதம் என்னிடம் இப்போதும் இருக்கிறது. அவருடைய அரசியல் நிலைப்பாட்டை நேராக எதிர்க்கிறேன் என்றாலும் தனிப்பட்ட ரஜினிகாந்த் மீது எனக்கு அளவுகடந்த மரியாதை உண்டு. அவர் நடிப்பின் மீது நமக்கு எந்த விமர்சனமும் கிடையாது. அவரை மட்டுமல்ல யாரையுமே தரம் தாழ்த்தி நம் கட்சியை சார்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் பதவிடக்கூடாது. நாம் பதிவிடும் ஒவ்வொன்றும் மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்கான ஒன்றாகவும் இருக்கவேண்டுமே தவிர அடுத்தவர்களை தரம் தாழ்த்த இல்லை என்பதை உணர்ந்து பதிவிட வேண்டும் என நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT