ரஜினிகாந்தின் அரசியல் முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று லீலாபேலஸ் ஹோட்டலில்ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்தரஜினிகாந்த் கட்சிஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமேநான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னைவருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதைநீங்கள் உணர்ந்து உழைத்துஅந்த எழுச்சியைமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி மக்களிடம்மாற்றத்துடன் கூடியஎழுச்சிஏற்பட்டால்தான் நான்அரசியலுக்கு வருவேன் என்றார்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் ரஜினியின் தற்போதையை அரசியல் முடிவைவரவேற்பதாகவும், வாழ்த்துவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனதுடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில்,
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! எனக்கூறியுள்ளார்.
அண்மையில் நடந்தசமூக ஊடகம் சார்ந்தபாசறை கூட்டத்தில் பேசிய சீமான், தன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு கொடுக்கவில்லை என்றாலும் எனக்கு வாழ்த்து அனுப்பியவர் ரஜினிகாந்த், அந்த கடிதம் என்னிடம் இப்போதும் இருக்கிறது. அவருடைய அரசியல் நிலைப்பாட்டைநேராக எதிர்க்கிறேன் என்றாலும் தனிப்பட்ட ரஜினிகாந்த்மீது எனக்குஅளவுகடந்த மரியாதை உண்டு. அவர் நடிப்பின் மீது நமக்குஎந்த விமர்சனமும் கிடையாது. அவரை மட்டுமல்ல யாரையுமேதரம் தாழ்த்தி நம் கட்சியைசார்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் பதவிடக்கூடாது. நாம் பதிவிடும் ஒவ்வொன்றும் மக்களுக்காகவும்,சமூக மாற்றத்திற்கான ஒன்றாகவும்இருக்கவேண்டுமே தவிர அடுத்தவர்களை தரம் தாழ்த்த இல்லை என்பதைஉணர்ந்துபதிவிட வேண்டும்எனநெகிழ்ச்சியோடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான்,
அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!
— சீமான் (@SeemanOfficial) March 12, 2020