பள்ளி மாணவி ஒருவர் எம்.எல்.ஏ.விற்கு உணவு ஊட்டி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜன்கோன் மாவட்டத்தில், கான்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாடிகொண்டா ராஜையா. சில்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக தாடிகொண்டா ராஜையா கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, அனைவரும் உணவு உண்ணும் இடத்திற்கு வந்துள்ளனர். பின்பு அங்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

Advertisment

mla

mla

Advertisment

அப்போது எம்.எல்.ஏ தாடிகொண்டா ராஜையாவிற்கும் உணவு பரிமாற அப்பள்ளி மாணவி உணவு கொண்டு வந்துள்ளார். பின்பு உணவு கொண்டுவந்த மாணவியிடம் உணவு ஊட்டி விடும் படி கூறியதாக சொல்லப்படுகிறது. அந்த மாணவியும் என்ன செய்வது தெரியாமல் அந்த எம்.எல்.ஏ.விற்கு உணவை கொடுத்துள்ளார். இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து இது குறித்து பேசிய எம்.எல்.ஏ, பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற அந்த மாணவி தனக்கு ஒரு அப்பா மாதிரி நினைத்து சாப்பாடு ஊட்ட விருப்பம் தெரிவித்தார், அதனால் அவரை என் மகளாக நினைத்து ஊட்டியதை ஏற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.