Advertisment

காவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மஜக போராட்டம்...

mjk

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதிகேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக, பதாகை ஏந்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி, நெல்லை மாவட்ட செயளாலர் நெல்லை நிஜாம் தலைமையில், மாவட்ட பொருளாளர் பேட்டை மூஸா முன்னிலையில், பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகில் இன்று போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில துணைச்செயளாலர் ஏ.ஆர்.சாகுல்ஹமீது, தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தமிழ்முரசு ஆகியோர் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

மேலும் பாளை பகுதி செயலாளர் சேக் அப்துல் காதர், பொருளாளர் முஹமது மைதீன், நெல்லை பகுதி செயளாலர் கலீல், பொருளாளர் என்.அப்பாஸ், மேலப்பாளையம் பகுதி செயலாளர் அன்சாரி, பொருளாளர் நாகூர்மீரான் உள்ளிட்ட மஜக பகுதி, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

jail Kovilpatti Tirunelveli mjk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe