ADVERTISEMENT

நாம எப்படி இருந்தோம் இப்ப எப்படி... சசிகலா அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு... அதிருப்தியில் அதிமுக அமைச்சர்கள்!

11:23 AM Mar 16, 2020 | Anonymous (not verified)

வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த அதே சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தின் திருமண வரவேற்பை நடத்தியிருக்கிறது சசிகலா குடும்பம்.

திடீரென ஒரு நாள் வளர்ப்பு மகனாக ஜெ. தத்தெடுத்துக் கொண்ட சுதாகரனின் திருமணம் சென்னை மந்தைவெளியில் உள்ள மறைந்த எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமான திறந்த வெளி நிலப்பரப்பில் நடந்தது. ஆடம்பரத்திற்கும் அதிகார வரம்பு மீறலுக்கும் 100 கோடி செலவில் நடத்தப்பட்டது என சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்வதற்கும் காரணமானது அந்த திருமணம். அந்தத் திருமணத்துக்கு பிறகு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வந்தால் வீட்டு மனைகளாக விற்கப்படாமல் இருந்த பல ஏக்கர் நிலத்திற்கு ஒரே இரவில் வீட்டுமனைகளாக விற்கும் அங்கீகாரத்தை வழங்கினார் ஜெ. இப்பொழுது எம்.ஆர்.சி.நகர் என்ற பெயரில் ஒரு பெரிய நகரமாக உருவாகியுள்ள அந்த இடத்தில் பிரபல நட்சத்திர விடுதியான லீலா பேலஸ் ஹோட்டல் அமைந்துள்ளது. அங்கு திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் மற்றும் சுதாகரனின் சகோதரர் ஜெ.ஜெ.டி.வி. பாஸ்கரனின் மகள் ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமண வரவேற்பு நடைபெற்றது.

ADVERTISEMENT



வளர்ப்பு மகன் திருமணம் போல் ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாக நடந்த இந்தத் திருமண வரவேற்புக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பத்திரிகையாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். மறைந்த நடராஜனுக்கு நெருக்கமான பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சசிகலாவின் வழக்கறிஞர்களான நாமக்கல் செந்தில், அசோகன் ஆகியோர் வந்திருந்தனர். இவர்களுடன் சசிகலாவின் சொந்த பந்தங்களான இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தொடங்கி அனைவரும் வந்திருந்தனர். அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன், இளவரசி, மகன் விவேக் ஆகியோர் மட்டும் வரவில்லை.

ADVERTISEMENT


மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஒரு திருமண விழாவில் திவாகரன் பேசியதால் சசிகலா பரோலில் திருமணத்திற்கு வரவில்லை என செய்திகள் பறந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெங்களூரு சிறையிலிருந்து ஒரு கடிதத்தை சசிகலா கொடுத்தனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை திவாகரனின் மகனும் ஜெ.வை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி கவனித்த டாக்டரான ராஜமாதங்கியும் வாசிக்க முற்பட்டனர். அந்த கடிதத்தை வாங்கி திவாகரன் மௌனமாக படிக்க அதன்பின் அனைவரும் திவாகரன் பாணியிலேயே மௌனமாக படித்தனர். கடிதத்தில் மணமக்களை வாழ்த்தியதோடு "ஒரு காலத்தில் மன்னார்குடி குடும்பம் எப்படி ஒற்றுமையாக இருந்தது.

தற்பொழுது சிதறி கிடக்கிறது. மறுபடியும் குடும்பம் ஒன்று சேர வேண்டும்' என குறிப்பிட்டிருக்கார் சசி என்கிறது மன்னார்குடி வட்டாரம். விழாவுக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் வெளிப்படையாக வராமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அனுப்பி திவாகரனிடம் அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறார்கள்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT