sasikala

வரும் ஆகஸ்ட் மாதம் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பா.ஜ.க.-வின் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017 பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் உள்ளார். இந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலையாகிறார் என்ற தகவல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் ஒரு வேளை ரிலீசுக்கு தடைகள் இருந்தாலும் சின்ன பிரஷர் கொடுத்தால் போதும், நீங்க செப்டம்பர் வாக்கில் வெளியே வந்துவிடலாம் என்று சிறையில் இருக்கும் சசிகலாவிடம் சிலரால் சொல்லப்பட்டிருக்கிறது. சசிகலாவோ, செப்டம்பரில் கரோனா உச்சத்தில் இருக்கும் என்று கூறுகிறார்கள்அந்த நேரத்தில் நான் ரிலீஸ் ஆனால் என்னை வரவேற்க பெரும் கூட்டத்தைத் திரட்ட முடியாது, கொஞ்ச நாள் ஆகட்டும் என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது.