Advertisment

சசிகலாவுக்கு கார் வழங்கிய நிர்வாகி நீக்கம்! - ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு!

SASIKALA SUPPORTER ADMK LEADER EPS AND OPS STATEMENT

சசிகலாவுக்கு கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என ஏழு நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால், சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.சம்பங்கி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, நாகராஜ், பிரசாந்த் குமார், ஆனந்த் ஆகிய ஏழு பேரும் கட்சியின் அடிப்படை பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெங்களூருவில் இருந்து வரும் சசிகலாவுக்கு அ.தி.மு.க. கொடியுடன் கார் வழங்கிய நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து எஸ்.ஆர்.சம்பங்கி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admk leader sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe