Advertisment

"சின்னம்மா மீது மரியாதை இருக்கிறது என ஓ.பி.எஸ். சொல்கிறாரே?" - சசிகலா பதிலால் சிரிப்பலை 

sasikala replies to ops statement

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த இரு தினங்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தியது. அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், சசிகலா குறித்த கேள்விக்கு சசிகலா மீது எந்தக் காலத்திலும் தனக்கு சந்தேகமில்லை எனப் பதிலளித்தார். பின், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சின்னம்மா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை உள்ளது என்றும் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், தி.நகரில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம் சின்னம்மா மீது தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கிறது என ஓ.பி.எஸ். சொல்கிறாரே எனக் கேள்வியெழுப்பியபோது, அவர் உண்மையைச் சொல்லியிருக்கிறார் எனப் பதிலளித்தார். சசிகலாவின் இந்தப் பதிலால் அவருடன் இருந்த தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. மேலும், அவர் பேசுகையில் கழகத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் இந்த இயக்கத்தில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

Advertisment

ops sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe