Advertisment

சசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்

சசிகலாவை முதல்வர் பழனிசாமி சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு என்று அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ''நான்கு ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்த நேரத்தில் சுவாசப் பிரச்சனை என்ற தகவலால் அச்சப்பட்ட நமக்கு மருத்துவ சிகிச்சையுடனேயே விடுதலையான அம்மையார் சசிகலாவை காண்பதில் நெகிழ்வான மகிழ்ச்சியே. அம்மையாரை வரவேற்கிறேன்.

Advertisment

‘ஊழல் குற்றவாளி - அவரென்ன சுதந்திரப் போராட்ட தியாகியா’ என்றுசசிகலா அம்மையாரை விமர்சன அம்புகளால் துளைப்பவர்கள், மனசாட்சியோடு நேர்மையோடு வாழும் ஊழலே செய்யாத அரசியல்வாதிகள் தமிழகத்திலேயே இல்லை என்று சொல்லட்டும் பார்க்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்.சசிகலாவை நோக்கி குற்றம் குறை காணுகிற எவரும் யோக்கியர் இல்லை என்பதே உண்மை.

கொங்கு மண்டல மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் அளித்த அம்மையார் சசிகலாவை முதல்வர் எடப்பாடியார் சந்தித்து பரஸ்பரம் அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதே மிகப்பெரிய பண்பாடு. முதல்வருக்கும், அஇஅதிமுகவுக்கும் அது நல்லதும் கூட.பணம், பதவிக்காகதுரோகமிழைப்பது நல்லதல்ல.அம்மையார் சசிகலா முழு ஓய்வெடுத்து பூரண நலம்பெற வேண்டி வாழ்த்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

pongalur manikandan sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe