Advertisment

‘சசிகலா குணமாக இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்..!’ - அதிமுக அமைச்சர்..!

sasikala

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, வரும் 27ஆம் தேதி விடுதலையாகிறார், அதிமுகவில் மாற்றம் நிகழும் என்று விவாதங்கள் நடந்து வந்தநிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சசிகலா இணைய 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

Advertisment

தமிழக அரசியல் களத்தில் இந்தப் பேட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சிறையில் இருந்த சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என தகவல் வெளியானது. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

கடந்த 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலா விடுதலை மற்றும் அதன் பிறகு அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து சிலர் பேசினர் என்றும், அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும், ‘அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், அதிமுகதான் மீண்டும் வெற்றிபெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கப்போகிறது.

ஆகையால் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எண்ணம் யாருக்கும் வேண்டாம். வெற்றி என்ற இலக்குடன் பணியாற்ற வேண்டும். அதிமுக நிர்வாகிகள் யாரும் துரோகங்களுக்கு விலை போகாதீர்கள். யாரும் வேறு யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம்’ என பேசினார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் மா.பா.பாண்யராஜன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘சசிகலா விரைவில் குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வரவேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம்’ எனக் கூறினார்.

admk minister sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe