Advertisment

பாஜகவில் தமிழிசை இடத்தை பிடித்தாரா? சசிகலா புஷ்பாவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எம்.பி சமீபத்தில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில், பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து 'தமிழகத்தின் ஜான்சி ராணி, சிங்க பெண்' என்று புகழ்ந்து ஒட்டப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவிற்கு விரைவில் பாஜகவில் முக்கிய பொறுப்பை கொடுக்க டெல்லி தலைமை தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசைக்கு பிறகு நாடார் சமுதாய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சசிகலா புஷ்பாவிற்கு பாஜகவில் முக்கிய இடம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

sasikala pushpa Poster politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe