சசிகலா விவகாரத்தில் மன்னார்குடித் தரப்பும் இப்போது இரண்டு பிரிவாகப் பிளவுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, சசிகலாவையும் அவரது சொத்துக்களையும் இளவரசியின் குடும்பம் தான் வருமான வரித்துறையிடம் காட்டிக் கொடுத்தது என்று உறவினர்கள் தரப்பில் இருக்கும் சசியின் ஆதரவாளர்கள் இளவரசி தரப்பை கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பண மதிப்பிழப்பு நேரத்தில், செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட, ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து 1674 கோடி ரூபாய்க்கான சொத்துக்களை சசிகலா வாங்கினார் என்றும் அதற்கான ஆதரத்தை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்து வருமான வரித்துறை எடுத்தது. அதே போல் கிருஷ்ணபிரியாவைப் போலவே, அவர் தம்பி விவேக்கிடமிருந்தும் சசிக்கு எதிரான ஒரு கடித ஆதாரத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.

Advertisment

sasikala

இந்த நிலையில் சசிகலாவின் சொத்து விபரங்களை இளவரசி குடும்பம் வருமான வரித்துறையிடம் காட்டிக் கொடுத்ததாக மன்னார்குடி வகையறா தரப்பில் கோபம் அதிகமாக எழுந்திருக்கும் நிலையில், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா மீது கடும் கோபத்தில் இருக்கும் சசிகலா, "இனி எக்காரணம் கொண்டும் என்னை சிறைக்கு வந்து பார்க்கக் கூடாது' என்று கிருஷ்ணப்பிரியாவுக்கு எரிச்சல் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என்கின்றனர். இதனால் இளவரசி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.