Advertisment

மறைந்த அமமுக பொருளாளர் குடும்பத்தினரை நேரில் சந்தித்த சசிகலா! (படங்கள்)

Advertisment

கடந்த வருடம் அக்டோபர் மாதம் அமமுகபொருளாளர் வெற்றிவேல், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுசென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 15ஆம் தேதி மாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அக். 16 அன்றுவெற்றிவேலின் உடல், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டது. அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் வீட்டின் மாடியிலிருந்தே வெற்றிவேலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் வாகனத்தின் உள்ளே இருந்த நிலையில், அமமுக நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று (09.08.2021) வி.கே. சசிகலா, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் வெற்றிவேலின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

VK Sasikala ammk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe