Advertisment

மூன்று வருடங்களுக்கு பிறகு ஜெ. நினைவிடத்தில் சசிகலா! (படங்கள்)

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்த இருக்கிறார்.

Advertisment

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட்ட நிலையில், அவருக்குத் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் செல்லும் சசிகலா, அங்கு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அதன் பிறகு எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்த இருக்கிறார்.

Advertisment

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d5575bb2-cad9-4d6d-804c-7f64b35ad048" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_134.jpg" />

ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்ததோடு சத்தியமும் செய்திருந்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சசிகலா சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிவித்திருந்த சசிகலா, அண்மைக்காலமாக அதிமுகவை மீட்கப்போவதாக அவரது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஃபோனில் பேசும் ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

jayalalitha admk sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe