Advertisment

சசிகலாவிற்கு பா.ஜ.க வைத்த செக்... அ.தி.மு.க.விடம் துணை முதல்வர் பதவி கேட்கும் பா.ஜ.க.? வெளிவந்த தகவல்!

admk

Advertisment

"தகவல் அறியும் சட்டத்தின் மூலம், நரசிம்மமூர்த்தி என்பவர் கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா ரிலீஸ் பற்றி கேட்டிருந்தார். அதற்குப்பதில் அளித்திருக்கும் சிறைத்துறை, சசிகலாவின் தண்டனைக் காலத்தைக் கணக்கிடுவதில் பல்வேறு நடை முறைகள் உள்ளது என்றும், அவருக்கு அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருப்பதால், அவருடைய விடுதலைத் தேதியில் மாற்றம் இருக்கலாம்என்றும், அதனால் இந்தக் கேள்விக்குத் தங்களிடம் பதில் இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது.இருந்தாலும் செப்டம்பர் 15ஆம் தேதி போல் சசிகலா ரிலீசாக வாய்ப்பு இருக்கும் என்று மன்னார்குடி தரப்புநம்பி வருவதாகச் சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, டெல்லியில் மூவ் பண்ணுவதால் இந்த நம்பிக்கை என்று கூறுகின்றனர். கர்நாடகாவில் நடப்பது பா.ஜ.க ஆட்சி. அதனால் டெல்லி பா.ஜ.க. தலைமை, கர்நாடகத்தில் இருக்கும் கட்சிப் பிரமுகர்கள் மூலம், சசிகலாவிடம் டீலிங் பேசி வருவதாகக் கூறுகின்றனர்.

அப்போது, பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.தான் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும், பா.ஜ.க.வுக்கு 30 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்படுவதோடு, துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறியதாகச் சொல்கின்றனர். அதேபோல், அ.தி.மு.க.வுக்கு 70 சதவீத தொகுதிகள் என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் டீலிங் பேசப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். மேலும் தான் சிக்கலில்லாமல் வெளியே வர, பா.ஜ.க. போடும் நிபந்தனைக்கு பாசிட்டிவ் பதில் கூறியதாகவும் சொல்கின்றனர். மேலும் சசிகலா விஷயத்தில் டெல்லி ரொம்ப உன்னிப்பாக இருப்பதாகச் சொல்கின்றனர். அதோடு மன்னார்குடி தரப்பு மூவ் பண்ணுவதை டெல்லியில் இன்னொரு தரப்பு பிரேக் போடுவதாகவும், அதனால் பா.ஜ.க. மேலிடமும் கன்வின்ஸ் ஆகாததால், சசி விடுதலை இப்போது இல்லை என்று கூறுகிறார்கள்.

politics sasikala admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe