Advertisment

சசிகலாவிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்... அதிர்ச்சியில் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

Advertisment

admk

இதனால் தண்டனை காலம் முடியும் முன்பு நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா சீக்கிரமாக விடுதலை ஆகி விடுவார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவுக்கு மீண்டும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. சிறையில் சசிகலாவுக்கு, சிறப்பு சலுகை வழங்குவதற்காக, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை ஏற்படுத்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

Advertisment

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய வினய்குமார் கமிஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடு நிகழ்ந்தது உண்மை என்றும், ரூபா வெளியிட்ட குற்றச்சாட்டில், ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், சிறைத்துறையின் முன்னாள் ஏடிஜிபி சத்தியநாராயணாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, கர்நாடக அரசுக்கு, ஊழல் தடுப்பு அமைப்பு, மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சசிகலாவிற்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

problem politics jail Bangalore sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe