சிறையிலிருக்கும் சசிகலா, தன் தம்பி திவாகரன் மீது கடுப்பில் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரித்த போது, ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பி. தஞ்சை பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழாவில் பேசிய சசிகலா சகோதரரான திவாகரன், பெரியாரை விமர்சனம் செய்த ரஜினியைக் கடுமையாக அட்டாக் செய்ததோடு, ஸ்டாலின்தான் ஆட்சியில் அமர்வார் என்று பாராட்டிப் பேசியிருந்தார். சசிகலாவோடு எடப்பாடி நெருக்கமாயிட்டார் என்று தெரிஞ்சேதான் திவாகரன் இப்படிப் பேசியிருக்கார் என்று அ.தி.மு.க.வில் புகைச்சல். சிறையில் இருக்கும் சசி காதுக்கும் எடப்பாடி தரப்பு மூலமே இந்த தகவல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் சசிகலா தன் தம்பி மீது கடுப்பாயிட்டார் என்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அ.தி.மு.க. தரப்பில் விசாரித்த போது, பழைய மாதிரி எங்க தரப்பில் இருந்து சரியான ’கவனிப்பும்’ மரியாதையும் திவாகரனுக்கு கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தில்தான் ஸ்டாலினைப் பாராட்டியிருக்கார் என்று சொல்கிறார்கள். அடுத்த மாதம் நடக்க இருக்கும் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்தின் திருமணத்திற்கு சசிகலா பரோலில் வருவார் என்ற தகவல் தான் அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கும் அரசியல் சிக்னல் என்று சொல்லப்படுகிறது.