ADVERTISEMENT

சசிகலாவிற்கு வந்த அதிர்ச்சி தகவல்... புதிய வழக்கு ரெடி... அதிர்ச்சியில் சசிகலா தரப்பு! 

12:09 PM Oct 23, 2019 | Anonymous (not verified)

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது. இதனால் தண்டனை காலம் முடியும் முன்பு நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா சீக்கிரமாக விடுதலை ஆகி விடுவார் என்று சொல்லப்பட்டது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்தார். இந்த செய்தியால் சசிகலா தரப்பிற்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் சசிகலா தரப்பிற்கு பெரிய அதிர்ச்சி சம்பவம் காத்திருப்பதாக சொல்கின்றனர். இந்நிலையில் சிறையில் இருந்த பொழுது சசிகலா லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நிரூபிக்கப்பட்டால் சசிகலாவிற்கு மேலும் சில ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இதனால் சசிகலாவிற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT