Advertisment

"என்னை எவ்வளவு இளக்காரமாக பேசிட்டு இருக்காங்க" கடும் கோபத்தில் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறையில் இருக்கும் சசிகலா என்ன செய்கிறார் என்று நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போது, திடீரென்று அப்செட் மனநிலையிலும், யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த சசிகலா, இப்போது யாரைப் பார்த்து பேசினாலும் , எல்லாரும் ஜெயலலிதா அக்கா, இறந்து விட்டதாக நினைக்கிறார்கள்.ஆனால் ஜெயலலிதாவின் ஆன்மா சாகவில்லை. ஜெயலலிதா என் கூடவே தான் இன்னும் இருப்பதாகவும் கூறிவருவதாக சொல்லப்படுகிறது.

Advertisment

admk

மேலும் ஜெயலலிதா அக்கா எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். தப்பு செய்யும் யாரையும் சும்மா விடமாட்டாங்க என்றும் கூறி வருவதாக சொல்கின்றனர்.அதே போல் என் காலில் விழுந்து மந்திரி பதவிகளை வாங்கிய ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், காமராஜ், ராஜேந்திர பாலாஜியெல்லாம் என்னை எவ்வளவு இளக்காரமாக பேசிட்டு இருக்காங்க என்று எனக்குத் தெரியும். நான் வெளியில் வந்ததும் யாரையும் விடமாட்டேன் என்று பல்லைக் கடித்த படி , ஓங்கிக் கையால் தரையில் அடித்து சபதம் செய்வதாக கூறுகின்றனர். அந்த அளவுக்கு அவர் மனம் நொந்து போயுள்ளதாக கூறுகின்றனர்.

admk jail jayalalitha minister sasikala Speech
இதையும் படியுங்கள்
Subscribe