Sasikala gave a sensational twist in politics,

Advertisment

இன்று சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப்பேசினார். அப்பொழுது செய்தியாளர்கள், ‘ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இணைந்தது மற்றும் உங்களை சந்திப்பதற்காக ஓபிஎஸ் காத்திருப்பதாகக் கூறப்படுவது...’ குறித்துகேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து சசிகலா பேசுகையில், ''அவரெல்லாம் எங்கள் கட்சிக்காரர்.திமுகவிலிருந்து ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். உங்கள் வீட்டில் ஒரு திருமணம் உங்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் வருகிறார்கள்.

அவர்களுக்கு முன்னாடி போய் சாப்பாடு வைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வெளியில் இருந்து வருகின்ற நண்பர்களை கவனிக்கிறதுதான் முறை. எங்கள் ஆட்களை எல்லாரையும் சமாளிக்க முடியும். அந்த கெபாசிட்டி எனக்கு இருக்கு. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. எந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும். ஓபிஎஸ் என்னை சந்திக்கலாம் எந்த தடையும் கிடையாது'' என்றார்.