Advertisment

சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு  ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்!   அமைச்சர் சீனிவாசனின்   பகீர் குற்றச்சாட்டு!!

s

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் தான் ஆளும் கட்சியான அஇஅதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமைதாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன் மற்றும் பாண்டியன் வரவேற்றார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணத்தை சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் குடும்பத்தினர் கொள்ளையடித்துவிட்டு ஜெயலலிதாவை வீட்டில் வைத்து சர்க்கரை நோயை அதிகமாக வரச் செய்துஸ்லோ பாய்சன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொலைசெய்த கும்பல் தான் தினகரன் கும்பல். அப்படி பட்ட கும்பல் பின்னால் சென்றுள்ள நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை தான் துரோகி. அவருக்கு நிலக்கோட்டை மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

Advertisment

அதுபோல்தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார்கள். அது முடியவில்லை. பத்து வருட காலம் தனக்கு துரோகம் செய்த காரணத்தினால் ஒரு வழக்கில் தினகரனையும் ஜெயலலிதாவையும் சிக்கவைத்து விட்டதாக கலைஞரிடம் நயவஞ்சகமாக பணத்தை கொடுத்து சிக்கவைத்து ஏமாற்றிவிட்டார். எனவே இதை பார்த்து அம்மா, நீ என் மூஞ்சிலேயே முழிக்க வேண்டாம். துரோகி போயஸ் கார்டன் பக்கம் வரவே கூடாது எனவும் கூறினார். அம்மா சொன்னது போல தினகரன் துரோகிதான்.

சண்டாள பாவிகள் நம்முடைய தெய்வத்தை வீட்டில் வைத்து சக்கரை வியாதி ஏற்றி ஸ்லோ பாய்சன் அதாவது மெதுவாக செலுத்தக்கூடிய விஷத்தை வைத்து கொலை செய்த கும்பல் தான் தினகரன் கும்பல். ஆனால் இன்று உத்தமர்களை போல நான்தான் எம்ஜிஆர் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதையும் நம்பி தங்கத்துரை அவர்கள் பின்னால் சென்று இருக்கிறார் என்றால் அதை மக்களாகிய நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சிக்கு துரோகம் செய்த நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கத்துரை இந்த ஆட்சி மூலம் கிடைத்த சம்பளம் சலுகைகள் உள்ளிட்டவற்றை இங்கே இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும். அப்படி செய்தால் நல்லவன் என்று சொல்வோம். நீங்கள் இங்கு வந்து அத்தனை சுகத்தையும் உறிஞ்சி குடித்து விட்டு இன்று துரோகியின் பின்னால் சென்றால் எப்படி நல்ல தீர்ப்பு வரும்.

வரக்கூடியஇந்த இடைத்தேர்தல் மூலம் ஒரு நல்லசட்டமன்ற உறுப்பினரை நிலக்கோட்டையில் உருவாக்குவோம். இன்றைக்கு திரைப்படத்தில் யார் எது சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இன்றைக்கு ஒட்டு மொத்தமாக அத்தனை நடிகர்களும் சேர்ந்து இந்த ஆட்சியை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன..? திரைப்படத்தில் ஊழலைப் பற்றி பேசுபவர்கள் ஊழல் இல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா.. இன்றைக்கு நடிகர்கள் வாங்குகின்ற சம்பளம் எவ்வளவு. அவர்கள் கட்டுகின்ற வரி எவ்வளவு இதைப்பற்றி தெளிவுபடுத்தினால் இன்றைக்கு நடிகர்கள் பற்றிய அனைத்து உண்மையும் வெளி வந்து விடும். அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற பெயரில் யாரோ போடுகின்ற படத்தில் நடித்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு நடித்துவிட்டு கருத்தைச் சொல்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்.

இந்தஅதிமுக அரசின் சார்பில் நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்ட ங்களை அதிமுக அரசு செய்து முடித்திருக்கிறது. அதேபோன்று 30 கோடி க்குமேலாக வத்தலகுண்டு ஒன்றியத்திற்கும் அதிமுக அரசு பல திட்டங்களை சாலை வசதிகள் அடிப்படை வசதிகள் போன்றவைகள் செய்துள்ளது. எனவே நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு செய்து கொண்டுதான் இருக்கிறது. எனவே அதிமுக ஆட்சிக்கு யாரை எல்லாம் நம்பி சட்டமன்ற உறுப்பினராக ஜெ வெற்றி பெறச் செய்தார் களோ அந்த 18 பேரும் இன்றைக்கு இந்த ஆட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு துரோகிகள் பக்கம் சென்று இருக்கிறார்கள். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இக் கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

dindugal srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe