'சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி!' - டி.டி.வி.தினகரன் தகவல்!

sasikala arrive tamilnadu ttv dhinakaran tweet

சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில்ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவர் பிப்ரவரி 8- ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், தமிழகம் வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.

sasikala arrive tamilnadu ttv dhinakaran tweet

அதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சசிகலாவை வரவேற்க வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க வேண்டும். சசிகலாவை அ.ம.மு.க.வினர் வரவேற்பதைத் தடுக்க சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக சந்தேகம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

sasikala TTV Dhinakaran Tweets
இதையும் படியுங்கள்
Subscribe