dddd

அண்ணாவின் 52வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக இன்று (03.02.2021) திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “சசிகலா விடுதலையாகி உள்ளார். அவர் உடல்நிலை முதலில் சீராக அமையட்டும். அதன்பின் அவர் சென்னைக்கு வந்த பிறகு அவரைக் குறித்துப் பேசலாம்.சசிகலா இதுவரை தன்னை ஒரு தலைவியாக எந்த இடத்திலும் நிரூபிக்கவில்லை. அவர் உடல்நிலை சரியாகி வந்த பிறகு, அவர் சிறந்த தலைவியாக நிரூபிக்க வேண்டும். அவர் ஒரு பெண் என்பதால் என்னுடைய தாயார் அவரை ஆதரித்தார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை,” என்று குறிப்பிட்டார்.

Advertisment