சர்கார் படத்திற்கு ஆளும் அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை சென்னை காசி தியேட்டர் முன்பு அதிமுகவின் தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி.என்.ரவி தலைமையிலான அதிமுகவினர் குவிந்தனர். அப்போது சர்கார் படத்திற்கு ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களை கிழித்தனர். இதையடுத்து அங்கு விஜய் ரசிகர்கள் குவிந்தனர். போலீசார் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பேனர்களை விஜய் ரசிகர்களே கழட்டினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
சர்கார் படத்தின் பேனர்கள் கிழிப்பு : அதிமுகவினர் விஜய் ரசிகர்கள் கூடியதால் சென்னையில் பரபரப்பு
Advertisment