Advertisment

இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன்... -தொண்டர்களுக்கு சரத்குமார் கடிதம்

Sarathkumar

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அதில்,

Advertisment

“அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் கடந்து 14-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், கடந்து வந்த பாதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னை அறியாமல் ஓர் மகிழ்ச்சி, பூரிப்பு, பிரமிப்பு, புத்துணர்ச்சி பெற்றதுபோல் ஓர் உணர்வு. கரோனா என்ற தொற்றின் ரூபத்தில் பல சகோதர, சகோதரிகளை, உற்றார், உறவினர்களை,நம் சொந்தங்களை இழந்து தவித்துகொண்டிருக்கிறோம்.

Advertisment

இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன், மன உறுதியுடன், உடல் உறுதியுடன், புதிய உத்வேகத்துடன் 14-ம் ஆண்டு சிறப்பாக அமைய பாடுபடுவோம். நம் எண்ணங்கள், நம் இலக்கு வெற்றி பெற, நேர்மையான உழைப்பு அவசியம். அந்த உழைப்பை அதிகரிப்பீர்கள் என நம்புகிறேன். உழைப்பும், உறுதியும் நம்மை நிச்சயம் வெற்றிபெற செய்யும் என்ற என் நம்பிக்கைக்கு உறுதுணையாக செயல்பட உங்களை கேட்டுக்கொள்கிறேன்”எனகூறியுள்ளார்.

sarathkumar SMK PARTY
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe