sarath-kumar

Advertisment

ஸ்டெர்லைட் போராட்டம் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் அதிமுகவுக்கு டெபாசிட் கூட வாங்க முடியாத நிலவரம் இருப்பதாக அக்கட்சியின் தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளது. இதையடுத்து சரத்குமாரை போட்டியிட வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

சரத்குமாரை இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வைத்து வாக்கு சேகரிக்கலாமா? அல்லது அவரை சுயேட்சையாக போட்டியிடச் சொல்லி திமுக வாக்குகளை பிரிக்கலாமா என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதால், சரத்குமாரை களம் இறக்கி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.