சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் அவரை சந்தித்துப் பேசினார். அப்போது 2019 பாராளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

Advertisment

sarathkumar edappadi palanisamy

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

மேலும் பேசிய அவர், முதல்வரை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக மத்திய அரசு இருக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன். மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு பாராளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் என்றார் சரத்குமார்.