தனித்து போட்டியிடுவதையே சமக தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆகையால் நாடாளுமன்றத் தேர்தலில் சமக தனித்து போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார்.
இந்த நிலையில் நெல்லை தொகுதி சமக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சரத்குமார் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே அவர் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆகையால் நெல்லை மாவட்டத்திற்கு அவர் பரிச்சயமானவர் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அத்தொகுதி நிர்வாகிகள் அவரை வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் சரத்குமார் நெல்லையில் போட்டியிடுகிறாரா அல்லது வேறு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறாரா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.