Sand

தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் மணல் வியாபாரியான ஆறுமுகசாமி. இவர் ஒரு லட்சம்டன்மணலை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொட்டி வைத்துள்ளார். இந்த மணலைமார்க்கெட்டில்விற்க வேண்டும்எனச்சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தீர்ப்பளித்த சென்னைஉயர்நீதிமன்றம், மாநில அரசு அனுமதித்தால் அந்த மணலை விற்கலாம் எனச் சொன்னது.

Advertisment

ஒரு லட்சம்டன்மணல்மார்க்கெட்டில்விற்பனையானால், தற்பொழுது 40 ஆயிரம் வரை விலை போகும் மணலின் விலை குறையும். அது தமிழ்நாடு முழுவதும் மணல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அ.தி.மு.க மணல் வியாபாரிகளுக்குப் பேரிடியாக அமையும் என்பதால் ஆறுமுகசாமியின் மணல் விற்பனைக்கு அனுமதி கொடுக்க எடப்பாடி மறுத்துவிட்டார். அதனால் நூற்றுக்கணக்கான கோடிரூபாய்மதிப்புள்ள மணலை விற்க முடியாமல் ஆறுமுகசாமி திணறிக்கொண்டிருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.