Salem City DMK Executives Election; . Distribution of application on Aug 9!

சேலம் மாநகர திமுக நிர்வாகிகளுக்கான தேர்தலையொட்டி நாளை (ஆக. 9) வேட்புமனு விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து, சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், " திமுக 15வது பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு, தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர திமுக நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்திட, தலைமைக் கழக தேர்தல் ஆணையராக அழகிரி சதாசிவம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Advertisment

ஆகஸ்ட் 9ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் அழகிரி சதாசிவம் வேட்புமனுக்களை வழங்க உள்ளார். பூர்த்தி செய்த வேட்புமனுக்களை அன்று மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநகர நிர்வாகிகள், முன்னோடிகள் அனைவரும் தேர்தல் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Advertisment