Advertisment

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

K.Balakrishnan-MLA

Advertisment

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் நலன்களுக்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஐந்து மாவட்ட விவசாயிகளின் தொடர் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய பலகட்ட போராட்டத்தின் விளைவாக எட்டு வழிச்சாலை தொடர்பான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில் ''இத்திட்டம் தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்யாமலும், அவசர கோலத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், சுற்றுச்சூழல் ஒப்புதல் முன்கூட்டியே பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வனங்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்திட்டம் தொடர்பான அரசின் அறிக்கையை ரத்து செய்ததுடன், இத்திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தும் 8.4.2019 அன்று தீர்ப்பளித்தது''.

Advertisment

மத்திய அரசு 2019 ஜீலை 3ல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என கூறியுள்ளார்.

8 ways road salem to chennai k.balakrishnan cpim
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe