Advertisment

"திட்டங்களை நிறைவேற்றுவதில் எஸ்.பி.வேலுமணி கில்லாடி"  -எடப்பாடி பழனிசாமி சர்டிஃபிகேட்! 

ttttt

Advertisment

வெற்றி நடை போடும் தமிழகம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரச்சாரத்தில், திமுகவையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சிப்பதுடன், தமிழக அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை பட்டியலிட்டு வருகிறார்.

'கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் வழிபட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையின் முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. முதல் நாளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வெள்ளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

முன்னதாக கோவை தொழிலதிபர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி பற்றி குறிப்பிட்டபோது, "கோவை மாவட்டத்துக்காக பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பைப் பெறுவதில் எஸ்.பி.வேலுமணி முதன்மையாக திகழ்கிறார். என்னை பார்க்கும் போதெல்லாம் மக்கள் நல திட்டங்களுக்கான கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். அவர் கோரிக்கை வைக்காத நாட்களே இல்லை. நிதி இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி எல்லாமல் கவலைப்படாமல் அதை செய்யுங்க, இதை செய்யுங்க என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருப்பார் வேலுமணி. மக்களுக்கான திட்டங்களை அடிக்கடி கேட்டு கேட்டு, அதனை பெறுவதில் மற்ற அமைச்சர்களுக் கெல்லாம், வேலுமணி முன்மாதியாக திகழ்கிறார்" என்று பாராட்டினார்.

Advertisment

கோவைக்காக அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், "ரூ. 1625 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம்,ரூ. 172 கோடி மதிப்பில் வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம். ரூ 39.17 கோடியில் உக்கடம் பெரியகுளம் குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகுபடுத்தப்படுகிறது. 624 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப்பணிகள். ரூ. 230 கோடி மதிப்பில் நொய்யல் நதி படுகையில் 18 அணைகள், 22 குளங்கள் புனரமைப்பு. ரூ. 1,620 கோடி மதிப்பில் 10.1 கி.மீ நீளம், 17.25 மீட்டர் அகலத்தில் 4 வழித்தடங்களுடன் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம். ரூ. 381 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் புதிய கட்டிடங்கள். தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம் மற்றும் புளியகுளம் ஆகிய 5 பகுதிகளில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ரூ.500.25 கோடி மதிப்பில் ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி வரை 4 வழிச்சாலை. ரூ. 194 கோடி மதிப்பில் காந்திபுரத்தில் 2 அடுக்கு மேம்பாலம் அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என சுட்டிக்காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

s.p.velumani Coimbatore election campaign eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe