Advertisment

“காய்த்த மரம் தான் கல்லடி படும்” - விஜய் பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

RSBharathi's response to Vijay's speech

த.வெ.க தலைவர் விஜய், “பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு இல்லை. அது கூடவே கூடாது. சமாதான சமத்துவ கொள்கையைக் கையில் எடுத்த போது இங்க கொஞ்சம் கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்த மாநாட்டில் வெளிப்படையாக அறிவித்ததற்கு அப்புறம் கதறல் இன்னும் சத்தமாகக் கேட்கும் என்று நினைக்கிறேன். அதனையும் பார்ப்போம். நம்முடைய இயல்பான அடிப்படையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிற மாதிரி மக்களை மதம், சாதி, இனம், மொழி பாலினம், ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும் தான் எதிரியா. அப்படி என்றால் நமக்கு ஒரே ஒரு எதிரி தானா இல்லையே.

Advertisment

நமக்கு இன்னொரு கோட்பாடு இருக்கிறது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது தானே அது. ஊழல் எல்லாரும் வாழ்க்கையில் பழகிப் போய் அது ஒரு வைரஸ் மாதிரி உள்ளது. அதனை 100% ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. வேற வழி இல்லை அதனை ஒழிக்க வேண்டும். ஆனா அது வேற கதை. இனவாத சக்திகளைக் கூட நாம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். மதம் பிடித்த யானை மாதிரி இந்த ஊழல் இருக்கிறது. இந்த ஊழல் எங்கே ஒளிந்து இருக்கு எப்படி ஒளிந்து இருக்கு. எந்த வடிவத்தில் ஒளிந்து இருக்கு என்று கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசிக் கொள்கையை நாடகம் போடும், கலாச்சார பாதுகாப்பு வேஷமும் போடும். ஊழலுக்கு முகம் இருக்காது. முகமூடி தான் இருக்கும். முகமூடி தான் இருக்குமே தவிர முகமே இருக்காது. முகமூடி போட்ட கரப்ஷன் கபடத்தார்கள் இப்போது கூட நம்மோடு இருந்து கொண்டு இப்போது இங்கு நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

நம்முடைய ஒரு எதிரி இனவாத சக்திகள். நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடத்தாரர்கள். மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இங்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது. இது மதச்சார்பின்மையைப் பேசுகிற தமிழ்நாட்டு மண். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் பிறந்த மண். சாதி இருக்கும். அது சைலண்டாக மட்டும் தான் இருக்கும். சாதி சமூக நீதிக்கான அளவுகோலாக மட்டுமே இருக்கும். அதனை வைத்து வேற மாதிரி முயற்சி செய்தாலும் அதனை நம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த மண்ணில் அது அரசியல் தியரி நிரூபிக்கப்பட்டது” எனப் பேசினார்.

திமுகவை விமர்சித்திருந்த விஜய்யின் பேச்சுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “ஒரே பதில் தான். திமுக என்பது ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது பழமொழி. அதனால், யார் கல் எறிந்தாலும் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தி எங்களுக்கு இருக்கிறது. ஆளுநர் உள்ளிட்டோர் திராவிட மாடல் குறித்து பேசி வருகின்றனர். தி.மு.க ஒரு ஆலமரம், விமர்சகர்களை எதிர்கொள்ளும். வார்த்தைக்கு, வார்த்தை யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe