rs bharathi

தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் மே 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மே 30ஆம் தேதிஉத்தரவிட்ட நீதிபதி நிர்மல்குமார், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மத்திய குற்றப்பிரிவின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தன்றே அவரது ஜாமீன் மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Advertisment

இதற்கிடையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனக்கு எதிராக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிராக பிறர் தொடர்ந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.