Rs 50 crore fraud in house building project; Allegation of M. Subramanian Bagir

கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடுகள்நடைபெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கையிலும்முறைகேடுகள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் எந்த அளவிற்கு நிர்வாகச் சீர்கேடுகளும் முறைகேடுகளும் இருந்தன என்பதை சிஏஜி அறிக்கை ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த துறைகளில் ஊழல் நடந்துள்ளதாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை எடப்பாடி பழனிசாமி தனது வசம் வைத்திருந்தார். அதன்மூலம் தனது குடும்பத்தாருக்கு டெண்டர்களை ஒதுக்க இத்துறைகளை அவர் வைத்திருந்தார் என்ற சந்தேகங்களை இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment

பழனிசாமி கையில் இருந்த துறைகளில் நடந்த ஊழலை புள்ளிவிவரங்களோடு இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகளைப் பயன்படுத்தி டெண்டர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரே ஐ.பி. எண்ணில் இருந்து 2,3 ஆன்லைன் டெண்டர்கள் போடப்பட்டதை சி.ஏ.ஜி. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

Rs 50 crore fraud in house building project; Allegation of M. Subramanian Bagir

செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் இருந்து 105 கிலோதங்கம், ரூ. 183 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. வணிகக் கூட்டமைப்பை உருவாக்கி அரசு ஒப்பந்தங்களை பெற்றதாக செய்யாதுரை மீது சி.ஏ.ஜி. குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 2019 முதல் 2021 வரை ஏராளமான பணி ஒப்பந்தங்களை செய்யாதுரையின் எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு வழங்கியுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் அதிமுக ஆட்சியில்தகுதியானவர்களுக்கு வீடுகளை வழங்கவில்லை. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 50 கோடி முறைகேடு நடந்துள்ளது என சி.ஏ.ஜி. அறிவித்துள்ளது. 2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளை விட குறைவான வீடுகளே கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகள் கட்டப்படவில்லை என்றும் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது” எனத்தெரித்துள்ளார்.