ADVERTISEMENT

“ரூ.4000 டிக்கெட் விலை ரூ.80,000” - கருணை இல்லா அரசு என சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்

02:54 PM Jun 04, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கை என்பது சில சடலங்களை இரண்டு எண்ணப்பட்டதே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காயமடைந்தவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களைத் தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் அவர்களைத் தொடர்பு கொள்ளத் தமிழக அரசு தொடர்ந்து முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

இந்நிலையில், ஒடிசாவிற்குச் செல்லும் விமானங்களில் பயணச் சீட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே! கொடூரமான ரயில் விபத்தைக் கூட லாப வெறிக்குப் பயன்படுத்தும் தனியார் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு? ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை... 4000 ரூபாய் டிக்கெட் 24,000 முதல் 80,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அரசு விமானம் இருந்தால் "வந்தே பாரத்"என்று கருணை காண்பிக்கலாம் அல்லவா!* கருணை இல்லா அரசே...* உறவினர் பயணக் கட்டணத்தை ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்!” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT