Advertisment

''சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை''- கமல்ஹாசன்!

'' Robbery in every unit of corona therapy '' - Kamalhasan

தமிழகத்தில் தொடர்ந்து கரோனாஇரண்டாம் அலை பரவி வருகிறது. நேற்று 21,228 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 6,228 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 6,000க்கும் அதிகமான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்துவருகிறது. நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 12,49,292 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 19,112 ஆக உள்ளது.

Advertisment

'' Robbery in every unit of corona therapy '' - Kamalhasan

தொடர்ந்து கரோனாபரவி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குபோன்றவையும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனாசிகிச்சையைநெறிப்படுத்த வேண்டும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''கரோனாசிகிச்சைக்கான கட்டணங்களை அரசு நெறிப்படுத்த வேண்டும். கரோனாசிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது. அனைத்துத் தனியார் மருத்துவமனைகளிலும்ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் இதனைஉடனே பரிசீலனை செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

stalin kamalhaasan Makkal needhi maiam corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe