ddd

டி.டி.வி. தினகரனை காணவில்லை என்று ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில், ஆர்.கே.நகரில் கடந்த 2017ம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் தொகுதி பக்கமே வருவதில்லை.

Advertisment

மக்களின் பிரச்சனையைக் கண்டுகொள்வதில்லை. இதுவரை அவரை தொகுதியில் பார்க்கவே இல்லை. எனவே அவரை கண்டுபிடித்துத் தரும்படி புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீஸார் பெற்றுள்ளனர். டி.டி.வி. தினகரனை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள விவகாரம் அமமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.