Advertisment

''புயல் வேகத்தில் உயிரூட்டிக் கொண்டிருக்கிறார்''- அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் புகழாரம் 

former minister

Advertisment

பாஜகவிற்கு புயல் வேகத்தில் உயிரூட்டிக் கொண்டிருப்பவர் தற்போதையதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என முன்னாள் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ''பாஜக என்றாலே மெல்லிய பூங்காற்றாக இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் இருந்த காலத்திலேயேபுயல் வேகத்தில் இன்று கட்சிக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கிறார் அன்புத் தம்பி, என்னுடைய கல்லூரி இளவல் அண்ணாமலை'' என்றார்.

அண்மையில் அனைத்து நாட்களும்கோவில்களைத்திறக்க வேண்டும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தின் முக்கிய கோவில்களின் முன்பாகஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 'மத்திய அரசின்வழிகாட்டுதலைப்பின்பற்றியே கோயில்களைத்திறக்கவில்லை' என்ற திமுக அமைச்சர்களின் பதிலுக்கு கடும் எதிர்ப்பை அண்ணாமலை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admk Mafa Pandiyarajan Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe